உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை

மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை

நாகப்பட்டினம்,:நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த மருதுாரை சேர்ந்தவர் குருசாமி மனைவி நாகம்மாள், 70. இவரது கணவர் சில ஆண்டிற்கு முன் இறந்துவிட்டார்.மகன் மலேஷியாவில் வேலை செய்வதால், மருமகளுடன் நாகம்மாள் வசித்து வந்தார்.அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற மூதாட்டி வீடு திரும்பவில்லை. அவரை தேடியதில், கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள யூகலிப்டஸ் தோப்பில், உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த, 2 சவரன் சங்கிலி, அரை சவரன் தோடு காணவில்லை.கரியாப்பட்டினம் போலீசார், மூதாட்டியை கொலை செய்தவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி