உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / இளைய சமுதாயத்திற்கு உதாரணமான வாலிபர்

இளைய சமுதாயத்திற்கு உதாரணமான வாலிபர்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தெத்தி கிராமத்தை சேர்ந்தவர் பரத்குமார், 34. இவர் வெளிப்பாளையம் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். அங்கு ஏராளமான இளைஞர்களுக்கு உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, மூட்டு பயிற்சி போன்ற பயிற்சிகளை அளிக்கிறார். இவரது மனைவி அபிநயாவும் பெண்களுக்கென்றே தனியாக உடற்பயிற்சி நிலைய பயிற்சி அளித்து வருகிறார்.இணைய மோகத்தில் மூழ்கி தடம் புரளும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாய், கடந்த 2021ம் ஆண்டு முதல் உலக அளவில், பல ஆணழகன் போட்டிகளில் பரத்குமார் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளார். இருமுறை, 'மிஸ்டர் தமிழ்நாடு' மற்றும் தேசிய அளவில் பலமுறை சாம்பியன் என நுாற்றுக்கணக்கான பதக்கங்களை குவித்துள்ளார்.கடந்த நவ., 22ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 30 நாடுகள் பங்கேற்ற சர்வதேச போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். ஆசியாவிலேயே சிறந்த பாடி பில்டர் என அங்கீகாரம் பெற்றுள்ள பரத்குமார், கடந்த டிச., 22ம் தேதி மும்பையில் நடந்த, 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற, ஒலிம்பியா போட்டியில், வெள்ளி பதக்கம் பெற்றார்.இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் பரத்குமாரை, எஸ்.பி., அருண் கபிலன் அழைத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ