மேலும் செய்திகள்
பலத்த காற்று எதிரொலி கடலுாரில் மீன்பிடிக்க தடை
15-Jun-2025
நாகப்பட்டினம்:தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்தும், மீன்வளத்துறை தடையால் நாகை பகுதி மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.,15 ம் தேதி முதல் ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவுடன் தடைக்காலம் முடிவடைந்தது, அதையொட்டி, நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மீன் பிடிக்க தயாராகினர்.ஆழ் கடலில் தங்கி மீன்பிடிக்க ஏதுவாக ஐஸ் கட்டிகள், உணவு தயார் செய்ய தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை விசைப் படகில் ஏற்றியிருந்தனர்.இந்நிலையில், வங்க கடலில் பருவ மாற்றத்தால் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை அனுமதி டோக்கன் வழங்கப்படாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் நேற்று இரவு உற்சாகத்துடன் மீன் பிடிக்க தயாரான நாகை மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளில் முடங்கினர்.
15-Jun-2025