உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / நாகை அ.ம.மு.க., வினர் அ.தி.மு.க.,வில் சங்கமம்

நாகை அ.ம.மு.க., வினர் அ.தி.மு.க.,வில் சங்கமம்

நாகப்பட்டினம்:நாகை மாவட்ட அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் தலைமையில் அக்கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்களுடன், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் மீது அதிருப்தியால், அக்கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன், நகர செயலாளர் உலகநாதன் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் 125 பேர், தங்கள் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், ஊர்வலமாக சென்று வேளாங்கண்ணி இ.சி.ஆர்., சாலையில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை