உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / பஞ்., செயலர் தற்கொலை உறவினர்கள் போராட்டம்

பஞ்., செயலர் தற்கொலை உறவினர்கள் போராட்டம்

நாகப்பட்டினம்:வேதாரண்யம் அருகே பஞ்., செயலர், அதிகாரிகள் திட்டியதால் தற்கொலை செய்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நாககுடையான் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 53. இவர், ஆயக்காரன்புலம் பஞ்., அலுவலகத்தில் செயலராக பணியாற்றினார். இவருக்கு, இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் சுப்பிரமணியன் கேட்டுள்ளார். இந்நிலையில், சுப்பிரமணியன், சரியாப்பட்டினம் ஊராட்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.நேற்று முன்தினம் வேதாரண்யம், பி.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று, 'ஊதியம் வழங்காமல், ஏன் இடமாறுதல் செய்தீர்கள்?' என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர்கள், சுப்பிரமணியன் உடலுடன், ஈரவாய்க்கால் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது. வேதாரண்யம் ஆர்.டி.ஒ., திருமால், போலீசார் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ