உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / ஊராட்சி அலுவலகத்தில் ரூ.52,00-0 பறிமுதல்

ஊராட்சி அலுவலகத்தில் ரூ.52,00-0 பறிமுதல்

நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் அருகே தெற்கு பொய்கைநல்லுார் ஊராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 52,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.நாகை மாவட்டம், தெற்குபொய்கைநல்லுார் ஊராட்சி அலுவலகத்தில், அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் பொதுமக்கள், கையூட்டு கொடுத்தால் தான் பணிகள் நடப்பதாக, நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 52,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஊராட்சி செயலர் அன்புராஜா, 52, என்பவரிடம், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !