மேலும் செய்திகள்
டிரைவருக்கு கத்தரிக் கோல் குத்து
11-May-2025
நாகப்பட்டினம்:நாகையில், இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், கீழே விழுந்தவர்கள் மீது லாரி ஏறியதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நாகை மாவட்டம், கூத்துாரை சேர்ந்தவர் வினோத்பாபு, 27. இவர், நேற்று மாலை, 6:45 மணியளவில், தன் மனைவி சிந்துபைரவி, 23, என்பவருடன் பல்சர் பைக்கில் காரைக்கால் நோக்கி சென்றார்.அதே நேரத்தில், சென்னையை சேர்ந்த கார்த்தி, 33, ஆனந்தராஜ், 24, ஆகியோர், 'ராயல் என்பீல்டு' புல்லட்டில், நாகூரில் இருந்து நாகை நோக்கி வந்தனர். இவ்விரு பைக்குகளும், நாகூர் இ.சி.ஆர்., சாலையில் ஆழியூர் பிரிவு சாலை அருகே நேருக்குநேர் மோதிக் கொண்டதில், நால்வரும் சாலையில் துாக்கி வீசப்பட்டனர்.சாலையில் விழுந்தவர்கள் மீது நாகூரில் இருந்து நாகை நோக்கி வந்த லாரி, ஏறியதில், வினோத்பாபு, கார்த்தி, ஆனந்தராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயமடைந்த சிந்துபைரவியை அங்கிருந்தோர் மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நாகூர் போலீசார் வழக்கு பதிந்து, வேதாரண்யத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன், 43, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
11-May-2025