உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / மாஜி அமைச்சர் மணியன் கார் மோதி இருவர் காயம்

மாஜி அமைச்சர் மணியன் கார் மோதி இருவர் காயம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர் ஓ.எஸ்.மணியன். அ.தி.மு.க., முன்னாள் கைத்தறி துறை அமைச்சர். தற்போது, வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ., வழக்கம் போல நேற்று காலை வீட்டில் இருந்து நாகையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்திற்கு தன், 'இன்னோவா' காரில் சென்றார். தலைஞாயிறைச் சேர்ந்த அருண், 30, என்பவர் காரை ஓட்டினார்.திருப்பூண்டி அருகே சென்ற போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர், சிக்னல் காட்டாமல் திடீரென்று வலது புறம் திரும்பினார் என கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க, கார் டிரைவர் பிரேக் அடித்தும், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது இடித்து, சாலையோரம் நின்ற மூதாட்டி மீது மோதி, பெரியாச்சியம்மன் கோவில் மதில் சுவர் மீது மோதி நின்றது. இதில், ஸ்கூட்டியை ஓட்டிய அன்பழகன், 38, சாலையோரம் நின்றிருந்த பாப்பா, 60, ஆகியோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.காரில் அமர்ந்திருந்த ஓ.எஸ்.மணியன் மற்றும் அவரது கார் டிரைவர் இருவரும், 'சீட் பெல்ட்' அணிந்திருந்ததால், காயமின்றி தப்பினர். விபத்து குறித்து கீழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி