உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெடி மருந்து வீசி ஆற்றில் மீன் பிடித்த 4 பேர் கைது

வெடி மருந்து வீசி ஆற்றில் மீன் பிடித்த 4 பேர் கைது

ப.வேலுார், :ப.வேலுார், காவிரி ஆற்றில் வெடி மருந்து வீசி, மீன் மற்றும் நீர் வாத்துகளை பிடித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ப.வேலுார், அனிச்சம்பாளையத்தில் தடுப்பணை அருகேயுள்ள, காவிரி ஆற்றில் வெடி போட்டு மீன் பிடிப்பதாக அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார், வெடி வைத்து மீன் பிடித்து கொண்டிருந்த மோகனுார் அருகே, கீழ் பாலபட்டியை சேர்ந்த ராஜா மகன் நவீன், 23, அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜித், 28, சதாசிவம் மகன் நத்தீஷ், 23, கரூர் மாவட்டம், புஞ்சை புகளூரை சேர்ந்த அங்கமுத்து மகன் கோகுல், 27, ஆகிய நான்கு பேரை ப.வேலுார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த, 20 கிலோ மீன், இறந்து போன பத்துக்கும் மேற்பட்ட நீர் வாத்துக்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !