வெண்ணந்துார் ஏரி தரை பாலத்தில் விபத்துகளால் வாகன ஓட்டிகள் தவிப்பு
வெண்ணந்துார் ஏரி தரை பாலத்தில் விபத்துகளால் வாகன ஓட்டிகள் தவிப்புவெண்ணந்தூர்,: வெண்ணந்தூர் அருகே உள்ள மதியம்பட்டி பகுதியில் இருந்து, சவுரிபாளையம் வழியாக வெண்ணந்தூர் செல்லும் சாலையில், மதியம்பட்டி ஏரி பகுதி உள்ளது. இந்த ஏரியின் கரையோரத்தில், எட்டு மாதங்களுக்கு முன், புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. ஏரியின் உபரி நீர் செல்வதற்காக தார் சாலையின் நடுவில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தரைப்பாலம் உயர்வாக அமைக்கப்பட்டதால், பாலத்தின் ஓரப்பகுதி கான்கிரீட் கூர்மையாக இருப்பதால், அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது டயர்கள் சேதமடைகின்றன.அந்த இடத்தில் பதற்றத்தில் திடீரென்று வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்கும் போது, பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மதியம் பட்டி ஏரி பகுதியில் இருக்கும் தரை பாலத்தையும், சாலையையும் இணைக்கும் வகையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.