உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெற்கு அரசு ஆண்கள் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தெற்கு அரசு ஆண்கள் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

நாமக்கல், :தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் போகி பண்டிகையுடன் பொங்கல் திருநாள் துவங்கியது. சூரியன் பொங்கல், இன்று மாட்டு பொங்கல், நாளை காணும் பொங்கல் என, வரிசை கட்டி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.பொங்கல் விழாவை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது. ஆசிரியர், ஆசிரியைகள் பாரம்பரிய உடையணிந்து வந்து, தமிழரின் கலாசாரத்தை பறைசாற்றினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை