நெரிசலை தவிர்க்க சென்டர் மீடியன் தேவை
நெரிசலை தவிர்க்க சென்டர் மீடியன் தேவைபள்ளிப்பாளையம்:காவிரி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வளைவு பகுதியில் சென்டர் மீடியன் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் கொண்டை ஊசி போன்று வளைவு உள்ளது. இந்த வளைவு திறந்தவெளியாக காணப்படுவதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வளைவு பகுதியில் கவனக்குறைவாக வந்தால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலரில் வரும் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, வளைவு பகுதியை விரிவுபடுத்தி, வாகனங்கள் சீராக செல்லும் வகையில் வளைவு பகுதியின் மையப்பகுதியில் சென்டர் மீடியன் வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.