தனியார் பள்ளியில் இலவச சேர்க்கைக்கு தகுதி தேர்வு
தனியார் பள்ளியில் இலவச சேர்க்கைக்கு தகுதி தேர்வுநாமக்கல்:தனியார் அறக்கட்டளை சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளியில் இலவச கல்விக்கான தகுதித்தேர்வு நாமக்கல்லில், நேற்று நடந்தது. எச்.சி.எல்., அறக்கட்டளை சார்பில், சென்னையில் வித்யாகான் என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி மூலம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 5ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு, 6 முதல், பிளஸ் 2 வரை சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளியில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும், ஆண்டுக்கு, 100 அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கான தகுதித்தேர்வு நாமக்கல்லில், நேற்று நடந்தது. நாமக்கல் கோட்டை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இதற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.இந்த மையத்தில், மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், 5ம் வகுப்பு படிக்கும், மொத்தம், 67 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர்க்கை வழங்கப்பட்டு, 6 முதல், பிளஸ் 2 வரை இலவச கல்வி வழங்கப்படும்.