உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழ் புத்தாண்டில் நாமக்கல் ஆஞ்சநேயருக்குசிறப்பு புஷ்பாஞ்சலி, தங்க கவச அலங்காரம்

தமிழ் புத்தாண்டில் நாமக்கல் ஆஞ்சநேயருக்குசிறப்பு புஷ்பாஞ்சலி, தங்க கவச அலங்காரம்

தமிழ் புத்தாண்டில் நாமக்கல் ஆஞ்சநேயருக்குசிறப்பு புஷ்பாஞ்சலி, தங்க கவச அலங்காரம்நாமக்கல்:தமிழ் புத்தாண்டையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு பஷ்பாஞ்சலி மற்றும் தங்க கவசம் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.நாமக்கல் நகரின் மையத்தில், கோட்டை பகுதியில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரி தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, வணங்கிய நிலையில், சாந்த சொரூபியாக எழுந்தருளி ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விசுவாவசு தமிழ் புத்தாண்டான நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைதொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திரை விலக்கப்பட்டு சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது.கோவில் பட்டாச்சாரியார்கள் பல்வேறு வகையான பூக்களை சுவாமி மீது பூச்சொறிந்து, சிறப்பு பூஜை செய்தனர். மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ