மேலும் செய்திகள்
உரையை வாசிக்காமலே கவர்னர் வெளிநடப்பு ...
07-Jan-2025
நாமக்கல்,:ஒவ்வொரு ஆண்டும், மாட்டு பொங்கல் அன்று திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில், திருவள்ளுவர் உருவ படத்துக்கு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர்துாவி மரியாதை செலுத்துவர்.அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் உருவ படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். அந்த திருவள்ளுவர் படம், காவி உடை அணிந்த நிலையில் இருந்தது சர்ச்சைக்குள்ளானது. ஏற்கனவே, இதுபோன்று காவி உடை தரித்த திருவள்ளுவர் புகைப்படம் தொடர்பாக கவர்னர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி நிறுவனரும், காந்தியவாதியுமான ரமேஷ் என்பவர், காவி உடையை விரைவு தபால் மூலம் நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து, கவர்னர் மாளிகை முகவரிக்கு அனுப்பி வைத்தார்.
07-Jan-2025