அரசு மகளிர் கல்லுாரியில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
அரசு மகளிர் கல்லுாரியில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிநாமக்கல், :நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி கலையரங்கில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.இதில், அரசு, தனியார் துறை வேலைவாய்ப்பு, மொபைல் போன்களால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பேசினார். கோவை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலைய உதவி இயக்குனர் சுப்ரமணியம், தொழில்நெறி வழிகாட்டல் குறித்து பேசினார். சுய வேலைவாய்ப்பு திட்டம் குறித்து மாவட்ட தொழில் மையம் அசோகன் பேசினார். பெண்கள் முன்னேற்றம் குறித்து, சமூக நல அலுவலர் ரம்யா பேசினார். இதில், கல்லுாரி விடுதி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.