உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடியிருப்பு சாலையில் சுவர்நடவடிக்கை கோரி மக்கள் மனு

குடியிருப்பு சாலையில் சுவர்நடவடிக்கை கோரி மக்கள் மனு

குடியிருப்பு சாலையில் சுவர்நடவடிக்கை கோரி மக்கள் மனுநாமக்கல்:நாமக்கல் - மோகனுார் சாலை, கொண்டிசெட்டிப்பட்டி குடிசை மாற்றுவாரியத்தை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொண்டிசெட்டிப்பட்டி குடிசை மாற்றுவாரியத்தில், 960 குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதி மக்கள் சென்றுவர, தெற்கு பகுதியில், 18 அடி அகலத்தில் வழித்தடம் உள்ளது. அதில், நேற்று முன்தினம் இரவு, திடீரென தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.மேலும், மூன்று தடத்தையும் மரம், மட்டை போட்டு அடைப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் நாங்கள் மெயின் ரோட்டுக்கு சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, அடைக்கப்பட்டுள்ள வழித்தடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ