உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் ஊழியர் மத்திய அமைப்புபணி நிரந்தரம் கோரி போராட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்புபணி நிரந்தரம் கோரி போராட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்புபணி நிரந்தரம் கோரி போராட்டம்நாமக்கல்:ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, மின் ஊழியர் மத்திய அமைப்பினர், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, மேற்பார்வையாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில், ஒப்பந்த ஊழியர்களை உடனே அடையாளம் கண்டு, தீபாவளி போனஸ் தொகை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள் இல்லை என, மின்துறை அமைச்சர் அறிவித்த செய்தியை திரும்ப பெறவேண்டும். தமிழக மின்வாரியத்தில், களபிரிவில், 35,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை வைத்து நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி=யுறுத்தினர். கோட்ட தலைவர் லோகேஸ், மாநில செயலாளர் தன பால் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி