உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்: பிப்., 1ல் தொடக்கம்

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்: பிப்., 1ல் தொடக்கம்

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்: பிப்., 1ல் தொடக்கம்நாமக்கல், : 'வரும் பிப்., 1 முதல், 14 வரை, 'கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில், பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. கோழிவளர்ப்பு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை மற்றும் இறைச்சி தேவைகளை அடைவதோடு, விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர்.கோழிவளர்ப்பு ஊரக பகுதிகளில் உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும், நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக நடக்கிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக, 'கோழிக்கழிச்சல் நோய்' உள்ளது.அவற்றை கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில், கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம், ஆண்டு தோறும் பிப்ரவரியில், கோழி நோய் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது.அதன்படி, இந்தாண்டு வரும் பிப்., முதல் மற்றும் இரண்டாம் வாரம், 1 முதல், 14 வரை, 'கோழிக்கழிச்சல் நோய்தடுப்பூசிப்பணி முகாம்' நாமக்கல் மாவட்டத்தில் நடக்கிறது.மேற்கண்ட நாட்களில், கால்நடை மருந்தகங்களில் நடக்கும் முகாம்களில், தங்களது கோழி களுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தை செலுத்தி பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி