உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் இரண்டு நாட்களுக்குதண்ணீர் நிறுத்தம்: கமிஷனர் தகவல்

ராசிபுரத்தில் இரண்டு நாட்களுக்குதண்ணீர் நிறுத்தம்: கமிஷனர் தகவல்

ராசிபுரம்: 'புதிய மின் மோட்டார் மற்றும் குழாய் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்வதால், ஜூலை 19, 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது' என, ராசிபுரம் நகராட்சி கமிஷனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ராசிபுரம் நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளுக்கு முறை வைத்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, தடையில்லா குடிநீர் வினியோம் வழங்க வேண்டும் என்பதற்காக, 8.25 கோடி ரூபாய் மதிப்பில் தனிப்பைப் லைன் அமைக்கும் பணி, கண்டர்குலமாணிக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், மகுடஞ்சாவடி அடுத்த எருமைப்பட்டி நீரேற்று நிலையத்தில் புதிய மின் மோட்டார் மாற்றும் பணி நடப்பதாலும், ராசிபுரம்-சேலம் சாலை ஏரிக்கரையில் நகருக்கு வரும் பிரதான இரும்பு குழாய் மாற்றி அமைத்து இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும், ஜூலை 19, 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு, ராசிபுரம் நகருக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ