உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடுமல்லசமுத்திரம்,: தேய்பிறை அஷ்டமியையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பெண்கள் வெண்பூசணியில் தீபமேற்றி வணங்கினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. இதேபோல், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கள்ளிப்பாளையம் சிவன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில்களில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ