ரேஷன் கார்டுதாரர்களுக்குநாளை குறைதீர் முகாம்
ரேஷன் கார்டுதாரர்களுக்குநாளை குறைதீர் முகாம்நாமக்கல்,:நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:பொது வினியோக திட்டத்தின் மூலம், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோருதல், மொபைல்போன் நம்பர் பதிவு போன்ற சேவைகளை மேற்கொள்வதற்காக, ரேஷன் கார்டு தாரர்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும், 2ம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது.மேலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் முகாம், நாளை (8ம் தேதி) காலை, 10:00 முதல் பிற்பகல் 1:00 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனுார். சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலுார் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் பிரிவில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடக்கிறது.எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.