உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காமராஜர் கல்வி நிறுவனத்தில்வருடாந்திர விருது வழங்கும் விழா

காமராஜர் கல்வி நிறுவனத்தில்வருடாந்திர விருது வழங்கும் விழா

காமராஜர் கல்வி நிறுவனத்தில்வருடாந்திர விருது வழங்கும் விழாநாமக்கல்:நாமக்கல் காமராஜர் கல்வி நிறுவனத்தில், வருடாந்திர வருது வழங்கும் விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். பொருளாளர் நடராஜன் மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டனர். சி.பி.எஸ்.இ., முதல்வர் கவிதா பாஸ்கர் வரவேற்றார். தொடர்ந்து, திரைப்பட நடிகர் தாமு, மாணவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்தி பேசினார்.அவர் பேசுகையில், ''காமராஜர் பள்ளி, ஆண்டுதோறும் கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை படைத்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களான உங்களால், இந்த கல்வி நிறுவனம் பெருமையடைகிறது. எதிலும் கவனிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் ஆண்டுதோறும் விருது பெற பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள்,பெற்றோர் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர். 'நாளைய தேசம் வகுப்பறையில் உள்ளது' என்ற அப்துல்கலாமின் வரிகளை நினைவில் வைத்துக்கொண்டு மாணவர்கள் சிறந்த படைப்பாளிகளாக வரவேண்டும்,'' என்றார்.காமராஜர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ