உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மீது வேன் மோதிதந்தை, மகன் படுகாயம்

டூவீலர் மீது வேன் மோதிதந்தை, மகன் படுகாயம்

டூவீலர் மீது வேன் மோதிதந்தை, மகன் படுகாயம்குமாரபாளையம்:திருப்பூர், வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 32; டைலர். இவரும், இவரது அப்பா ஜீவா, 54, இருவரும், குமாரபாளையத்தில் உள்ள தன் உறவினரை பார்க்க, நேற்று முன்தினம், 'பஜாஜ் டிஸ்கவர்' டூவீலரில் சென்றனர். பின், வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.சேலம் -கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு அருகே சர்வீஸ் சாலை வளைவில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியே வேகமாக வந்த, 'பொலீரோ பிக்அப்' வேன் டூவீலர் மீது மோதியது.இதில், நந்தகுமாரும், ஜீவாவும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, வேன் டிரைவரான, குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 23, என்பவரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை