உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உச்சநீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்புஅனைத்து மாநிலத்திற்கும் ஊக்கம் அளிக்கும்

உச்சநீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்புஅனைத்து மாநிலத்திற்கும் ஊக்கம் அளிக்கும்

'உச்சநீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்புஅனைத்து மாநிலத்திற்கும் ஊக்கம் அளிக்கும்'நாமக்கல்:''தமிழக அரசால், உச்சநீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பு, அனைத்து மாநிலத்திற்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது,'' என, தி.மு.க., நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் ராஜேஷ்குமார் எம்.பி., கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, கவர்னர் ரவி நிறுத்தி வைத்தது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமானது என்று, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும் தான் மாநில கவர்னர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது. மாநிலங்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தும், வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு, இந்தியாவில் உள்ள பா.ஜ., அல்லாத, அனைத்து மாநில அரசுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ