உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பகுதி நேர வேலை எனக்கூறி தி.கோடுபெண்ணிடம் ரூ.17.45 லட்சம் மோசடி

பகுதி நேர வேலை எனக்கூறி தி.கோடுபெண்ணிடம் ரூ.17.45 லட்சம் மோசடி

பகுதி நேர வேலை எனக்கூறி தி.கோடுபெண்ணிடம் ரூ.17.45 லட்சம் மோசடிநாமக்கல்:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி கீர்த்தனா, 29; இல்லத்தரசி. சில நாட்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், 'ஆன்லைனில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அது தொடர்பான டாஸ்கில் வெற்றி பெற்றால், அதிகளவு பணம் சம்பாதிக்கலாம்' என, ஆசைவார்த்தை கூறியுள்ளார்.அதை உண்மை என நம்பியவர், தன் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக பணம் அனுப்பியுள்ளார். முதலில் சிறிய அளவில் லாபத்துடன் பணம் திரும்ப வந்தது. அதனால் நம்பிக்கை அடைந்த கீர்த்தனா, 18 தவணைகளாக, 18 லட்சத்து, 25,451 ரூபாய் செலுத்தியுள்ளார். அதில், 79,871 ரூபாய் மட்டும் திரும்ப வந்தது. மீதமுள்ள, 17 லட்சத்து, 45,580 ரூபாய் திரும்ப வரவில்லை. அதிர்ச்சியடைந்த கீர்த்தனா, நேற்று நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.'டாஸ்க் என கூறி, பிரபல வர்த்தக தளத்தில், ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக தேர்வு செய்து, 'கிளிக்' செய்ய வேண்டும். அந்த பொருள் விற்பனை செய்யப்பட்டு, கமிஷன் தொகை தேர்வு செய்யப்பட்டவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதுபோல் தொடர்ந்து செய்ய வைத்து, அதிகளவில் பணம் மோசடி செய்துவிடுவர்' என்றனர் போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ