உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 10 நாள் மக்காச்சோள பயிரில் பூச்சி தாக்கம்: விவசாயிகள் அதிர்ச்சி

10 நாள் மக்காச்சோள பயிரில் பூச்சி தாக்கம்: விவசாயிகள் அதிர்ச்சி

புதுச்சத்திரம்: ஆவணி மாத பட்டமாக பயிரிட்டு, 10 நாட்களே ஆன மக்காச்-சோள பயிரில், பூச்சி தாக்கம் ஏற்பட்டிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், வேலக-வுண்டம்பட்டி, எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் மரவள்ளி பயிருக்கு பதிலாக, ஆயிரக்கணக்கான ஏக்-கரில், ஆவணி மாத பட்டத்தில் மாக்காச்சோளம் பயிரிட்டுள்-ளனர். மூன்று மாத பயிரான இந்த மக்காச்சோளம், கோழிப்பண்-ணைகளுக்கு தீவனம் அரைக்க பயன்படுகிறது. சில ஆண்டுகளாக மக்கச்சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆந்-திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, கோழித்தீவனம் அரைக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மக்காச்சோளத்திற்கு கடந்த, 2 ஆண்டாக நல்ல விலை கிடைக்கிறது.இந்தாண்டு அதிகளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்-டுள்ள நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு முன் நடவு செய்யப்-பட்ட மக்காச்சோளப்பயிரில், பூச்சி தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்துகள் இருந்தாலும், தனியார் மருந்து கடைகளில் இந்த மருந்து, 1,000 ரூபாய் வரை விற்கின்றனர். வேளாண் துறையினர், இதுபோன்ற தடுப்பு மருந்துகளை மானிய விலையில் வழங்குவதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !