உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போஸ்ட் ஆபீசில் பொங்கல் விழா

போஸ்ட் ஆபீசில் பொங்கல் விழா

போஸ்ட் ஆபீசில் பொங்கல் விழாராசிபுரம், :ராசிபுரம் தபால் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பொங்கல் விடுமுறைக்கு முன், ஊழியர்கள் குறைவாக பணிக்கு வந்ததால் பொங்கல் விழா கொண்டாடவில்லை. நேற்று, அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்ததால், பொங்கல் விழா கொண்டாடினர். ஆண்கள், பெண்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். வெளிமாநில ஊழியர்களும் வேட்டி சட்டை அணிந்து வந்து அசத்தினர். தொடர்ந்து, அலுவலகம் முன் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினர். போஸ்ட் மாஸ்டர் சித்தேஸ்வரன், உதவி போஸ்ட் மாஸ்டர் சிவக்குமார், நிர்மலா, பலராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி