தீயணைப்பு விழிப்புணர்வு
திருச்செங்கோடு :திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில், நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாப்பிரியா முன்னிலை வகித்தார்.இதில், தீ விபத்துகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது; வீடுகளில் மின்கசிவு மற்றும் காஸ் சிலிண்டர் கசிவு ஆகியவற்றால் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது; நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.