உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் குப்பை கிடங்கில் தீ

ராசிபுரம் குப்பை கிடங்கில் தீ

ராசிபுரம் குப்பை கிடங்கில் தீராசிபுரம்:ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் குப்பை கிடங்கு உள்ளது. நகர் பகுதியில் உள்ள மக்களிடம் குப்பைகளை பெற்று, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளனர்.நேற்று இரவு, திடீரென குப்பை கிடங்கில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில், தீ அனைத்து பகுதிக்கும் பரவியது. நகராட்சி பணியாளர்கள், ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசியது. ஒரு மணிநேரத்திற்கு பின் புகை குறைந்து சீரானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்துணிப்பை பயன்படுத்த அறிவுரைமல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் டவுன் பஞ்., காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவையொட்டி, நேற்று, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமை, கலெக்டர் உமா பார்வையிட்டார்.தொடர்ந்து, துாய்மை பணி, சுகாதார பணி, பாதுகாப்பு பணி மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம், உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாள் விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையில் துணிப்பைகளை பயன்படுத்துமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சமுதாய கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ