உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராஜ வாய்க்காலில்இன்று முதல்தண்ணீர் நிறுத்தம்

ராஜ வாய்க்காலில்இன்று முதல்தண்ணீர் நிறுத்தம்

ராஜ வாய்க்காலில்இன்று முதல்தண்ணீர் நிறுத்தம்ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தொடங்கும் ராஜ வாய்க்கால் வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனுார், ப.வேலுார், மோகனுார் வழியாக சென்று ஒருவந்துார் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள கரும்பு, வெற்றிலை, தென்னை, வாழை சாகுபடிக்கு ராஜ வாய்க்கால், விவசாயிகளின் பாசன ஆதாரமாக உள்ளது. ஆண்டுதோறும் இந்த ராஜ வாய்க்காலில் பிப்., மாதம் பராமரிப்பு பணி மற்றும் துார் வாருவதற்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம்.அதேபோல், இன்று, 22 முதல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. வரும் மார்ச், 16ல் மீண்டும் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி