வேளாண்மைத்துறை சார்பில்விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி
வேளாண்மைத்துறை சார்பில்விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சிராசிபுரம்:ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள வடுகம் கிராமத்தில், தமிழ்நாடு வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. அதில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தால், விவசாயிகளுக்கு ஏற்படும் பலன், உழவர் சந்தையின் பலன் குறித்து, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விளக்கினர்.மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களை, விவசாயிகள் கமிஷன் இன்றி விற்கமுடியும். வேளாண் பொருட்களை காயவைக்கவும், விலை குறைந்திருந்தால் அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள, 'இ-நாம்' டெண்டர் மூலம் இந்தியாவில் எந்த ஒரு பகுதியில் உள்ள வியாபாரியும், விளை பொருட்களை வாங்க முடியும் என்பதால் நல்ல விலை கிடைக்கும் என, தெரிவித்தனர். தொடர்ந்து, பி.ஜி.பி., வேளாண்மை அறிவியல் கல்லுாரி மாணவியர், விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்வதன் நோக்கம், பலன்கள் குறித்து செய்முறை விளக்கமளித்தனர்.