உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மகா சிவராத்திரியையொட்டிகோவில்களில் குவிந்த பக்தர்கள்

மகா சிவராத்திரியையொட்டிகோவில்களில் குவிந்த பக்தர்கள்

மகா சிவராத்திரியையொட்டிகோவில்களில் குவிந்த பக்தர்கள்சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் காசி விசாலாட்சி அம்மை உடனுறை ஸ்ரீகாசி விசுவநாதர் கோவில் உள்ளது. நேற்று மகா சிவராத்திரி விழாவையொட்டி, மாலை, 5:00 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது.இதில், சிவபெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 2ம் கால பூஜை, இரவு, 10:00 மணிக்கும், 3ம் கால பூஜை நள்ளிரவு, 11:30 மணிக்கும் நடந்தது.இதேபோல், கொல்லிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவிலில், அரப்பளீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.சேந்தமங்கலத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் உள்ள சிவனுக்கு, நேற்று மாலை முதல் பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், பழையபாளையம் அங்காளம்மனுக்கு, பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தி தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி