மேலும் செய்திகள்
வாசிப்பே சுவாசம்; உணரும் மாணவர்கள்
27-Feb-2025
பள்ளிக்கல்வி பாதுகாப்புஇயக்கம் புத்தகம் வழங்கல்ராசிபுரம்:பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, ராசிபுரம் வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியசீலன், சுதா மயில்வாகனன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார். மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தாளமுத்து, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 'இல்லம் தேடி கல்வி' குறும்படம் தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு நபர், ஒரு பள்ளி செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும், சான்றிதழ், வாசிப்பு இயக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.
27-Feb-2025