மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025
'செக்' மோசடி செய்தவருக்குஓராண்டு சிறை தண்டனைராசிபுரம்:ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் நவனி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் ரவிக்குமார், 53; இவருடைய நண்பர், ராசிபுரம் பூக்கடை தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயத்திருமலை, 59. இவர், குடும்ப செலவிற்காக ரவிக்குமாரிடம், கடந்த, 2019ல், 3.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக, பின் தேதியிட்டு, 'செக்' கொடுத்துள்ளார். குறிப்பிட்ட தேதியில், 'செக்'கை வங்கியில் ரவிக்குமார் டிபாசிட் செய்துள்ளார். ஆனால், பணம் இல்லை என, 'செக்' திரும்ப வந்தது.இதையடுத்து, ராசிபுரம் நீதிமன்றத்தில், ரவிக்குமார், 'செக்' மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா முன் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ரவிக்குமாருக்கு இழப்பீடாக ஜெயத்திருமலை, ஐந்து லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் மற்றும் செக் மோசடி செய்ததற்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
11-Mar-2025