சருவமலையில் தீப்பிடித்து செடி, கொடிகள் நாசம்
சருவமலையில் தீப்பிடித்து செடி, கொடிகள் நாசம்மோகனுார்:மோகனுார் அருகே உள்ள சருவமலையில் தீ விபத்து ஏற்பட்டு மரம், செடி, கொடிகள் எரிந்து வருகின்றன.நாமக்கல்லில் இருந்து, மோகனுார் செல்லும் சாலையில் உள்ள அணியாபுரம் தோளுருக்கு இடையில் சருவமலை உள்ளது. வெயில் காலமாக உள்ளதால், அந்த பகுதியில் உள்ள செடி கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளது. தற்போது காற்றும் பலமாக அடித்துக் கொண்டுள்ளதால், ஒரு பகுதியில் தீ பிடித்துள்ளது.தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாகி, மலை முழுவதும் தீ பிடித்து மளமளவென பரவி ஏராளமான பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனரா அல்லது யாராவது புகை பிடித்துவிட்டு பீடி, சிகரெட்டை போட்டதால் தீ பிடித்து எரிந்ததா என தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும், இதே போல் தான் தீ விபத்து ஏற்படுகிறது. ஆகவே, இந்த பகுதியை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.