உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பங்குனி உத்திர காவடியுடன்பக்தர்கள் பாத யாத்திரை பங்குனி உத்திர காவடியுடன்பக்தர்கள் பாத யாத்திரை

பங்குனி உத்திர காவடியுடன்பக்தர்கள் பாத யாத்திரை பங்குனி உத்திர காவடியுடன்பக்தர்கள் பாத யாத்திரை

பங்குனி உத்திர காவடியுடன்பக்தர்கள் பாத யாத்திரைகுமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையம், வீ.மேட் டூர், நல்லாம்பாளையம், சின்னாயக்காடு, சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு பங்குனி உத்திரம், வரும், 11ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று முருக பக்தர்கள், காவடிகளுக்கு சிறப்பு பூஜை செய்து, பாதயாத்திரை துவங்கினர். இவர்கள் வரும் வெள்ளிக்கிழமை, பழனி முருகன் கோவிலை சென்றடைவர். ஊர் மக்கள், வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !