உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை அறிவித்த கோர்ட்

தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை அறிவித்த கோர்ட்

தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை அறிவித்த கோர்ட்குமாரபாளையம்:குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையத்தில், பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக, இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து, திருச்செங்கோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்-2ல், விசாரித்து, அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்த பாவா(எ) கோவிந்தராஜ், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சுரட்டையன் (எ) சிவா ஆகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருவரும் ஜூன், 3ல், திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ