மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணிய சுவாமிக்குதைப்பூச சிறப்பு பூஜை.
08-Feb-2025
ஓய்வு பெற்ற இன்ஜினியர் வீட்டில்ரூ.2.10 லட்சம், ஒரு பவுன் திருட்டுநாமக்கல்:நாமக்கல் - திருச்சி சாலை, எஸ்.கே., நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 65. இவர், நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது சொந்த ஊர் எருமப்பட்டி அடுத்த சிங்கிளியன் கோம்பை. அங்கு நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, பாலசுப்ரமணி, கடந்த, 6ல் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, உறவினர் ஒருவர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, பாலசுப்ரமணிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வீட்டுக்கு வந்த பாலசுப்ரமணி, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 2.10 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு பவுன் மோதிரம் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-Feb-2025