உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு ஆலைகள் செயல்பட எதிர்ப்பு

சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு ஆலைகள் செயல்பட எதிர்ப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் செயல்-படும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை குடிக்கும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக்கூறி, நேற்று காலை, அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடி, சாய ஆலைகள் செயல்படக் கூடாது என, எதிரிப்பு தெரிவித்-தனர். தகவலறிந்து வந்த குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவா-ரிய அதிகாரிகள், குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார், பள்-ளிப்பாளையம் போலீசார் ஆகியோர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து, குமாரபாளையம் தாசில்தார் சிவகுமார் கூறியதா-வது: சமயசங்கிலி பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்-டது. அதில், உயர் அதிகாரிகளின் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, அப்பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் ஆய்வு செய்யப்படும். ஆய்வின் அடிப்படையில், 15 நாட்களில் சாய ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை