சாலையோரம் இறைச்சி கழிவு
சாலையோரம் இறைச்சி கழிவுமல்லசமுத்திரம்:கூத்தாநத்தம் கிராமத்தில் சாலையோரத்தில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மல்லசமுத்திரம் ஒன்றியம், கூத்தாநத்தம் பகுதியில், இறைச்சி கடைக்காரர்கள், கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி குவித்துள்ளனர். இதனால், சுற்றுவட்டாரம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வழியாக செல்வோர், மூக்கை பொத்தியபடி கடந்து செல்கின்றனர். எனவே, கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளை அகற்றி, எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.