மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (05.02.2025) திருவள்ளூர்
05-Feb-2025
ஷீரடி பிருந்தாவனத்தில்பக்தர்கள் தரிசனம்நாமக்கல்:நாமக்கல்-திருச்சி சாலை, ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் ராம நவமி, பிரதிஷ்டை தினம், குரு பூர்ணிமா, குரு ராகவேந்திரா ஆராதனை, விநாயகர் சதுர்த்தி, விஜய தசமி மற்றும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஆகிய முக்கிய நாட்களிலும், ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையும் சிறப்பு ஆரத்தி நடக்கும். அந்த வகையில், நேற்று மாசி இரண்டாவது வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு நடை திறப்பு, காகட ஆரத்தியும், 8:00 மணிக்கு அபிேஷகம், 12:00 மணிக்கு பஜனை நிகழ்ச்சி, கூட்டு பிரார்த்தனை, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பித்து மதியம் ஆரத்தி நடந்தது.மாலை 6:00 மணிக்கு துாப் ஆரத்தியும், 8:30 மணிக்கு இரவு ஆரத்தியும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், ஷீரடி சாய் தத்தாவை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
05-Feb-2025