உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழாநாமக்கல்:நாமக்கல் - மோகனுார் சாலையில், கொண்டிசெட்டிப்பட்டி உள்ளது. இங்கு நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சபூர் அகமது, பட்டதாரி ஆசிரியர் சுதமதி, கவுன்சிலர்கள் கமலா, தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாணவ, மாணவியர் சினிமா பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு நடனமாடினர். மேலும், கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை