உலக தண்ணீர் தின பேச்சுப்போட்டி
உலக தண்ணீர் தின பேச்சுப்போட்டி குமாரபாளையம்:உலக தண்ணீர் தினத்தையொட்டி, குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலை பள்ளியில், குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேச்சுப்போட்டி நடந்தது. தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் பேச்சு போட்டியில் பங்கேற்று, தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள், சேமிப்பு பற்றி பேசி தனித்திறமையை வெளிப்படுத்தினர். வானவில் மன்ற கருத்தாளர் குணசேகரன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.*****************