மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பாம்பு
24-Mar-2025
விசைத்தறி கூடத்தில்புகுந்த பாம்பு மீட்புபள்ளிப்பாளையம்,:விசைத்தறி கூடத்தில் புகுந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர் காட்டுப் பகுதியில் விட்டனர்.பள்ளிப்பாளையம் அருகே, பெரியகாடு பகுதியில் விசைத்தறி கூடம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, தொழிலாளர்கள் வழக்கம்போல் பணி செய்து கொண்டிருந்தனர்.அப்போது, 11:00 மணி அளவில், விசைத்தறி கூடத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.பின், வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விசைத்தறி கூடத்தில் பதுங்கி இருந்த, ஐந்தடி நீள சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
24-Mar-2025