உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் கூட்டம்

தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் கூட்டம்

தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் கூட்டம்நாமக்கல்:கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் வரவேற்றார். தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, சமூக வலைதள பயிற்சியாளர் இளமாறன், இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் சீனிவாசன், ஆனந்தகுமார் ஆகியோர் பேசினர்.மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட, உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதை பெற்றுத்தந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ