ரேஷனில் இலவச பொருள்மா.திறனாளிகள் கோரிக்கை
ரேஷனில் இலவச பொருள்மா.திறனாளிகள் கோரிக்கைநாமக்கல்:நல்வாழ்வு பர்வையற்றோர் நல சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. சங்க தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் மூர்த்தி, ஆலோசகர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, 1,500ல் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளில், இலவசமாக உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படி இரட்டிப்பாக வழங்க வேண்டும். நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் போது, இதற்கான உத்தரவை அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இதுகுறித்த கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் வழங்கினர்.