உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் மோதியதில் தம்பதியர் படுகாயம்

டூவீலர்கள் மோதியதில் தம்பதியர் படுகாயம்

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, டூவீலர்கள் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் சின்னதம்பி பாளையம் பகுதியில் வசிப்பவர் சங்கர், 48, விவசாய கூலி. இவரது குடும்ப விசேஷத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க, மனைவி செல்வியுடன், 42, கடந்த 19 மதியம், 2:45 மணியளவில், எக்ஸல் கல்லுாரி அருகே, டி.வி.எஸ்., மொபட்டில் வந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது, சேலத்திலிருந்து வேகமாக வந்த யமஹா பைக் ஓட்டி வந்தவர், மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் தம்பதியர் இருவரும் படுகாயமடைந்தனர். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ