உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூசாரியிடம் சாட்டைஅடி வாங்கிய பக்தர்கள்

பூசாரியிடம் சாட்டைஅடி வாங்கிய பக்தர்கள்

மல்லசமுத்திரம்:வையப்பமலை, மகாமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய வினோத வழிபாடு நடந்தது.மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவிலில், கடந்த 17ல் கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 8:00மணிக்கு தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பக்தர்கள் கோவில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினர்.மாலை 3:00 மணிக்கு அக்னிசட்டி, முளைப்பாரி ஊர்வலம், மேளக்கச்சேரி, நையாண்டி, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 7:30க்கு பொங்கல் வைபவம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல் நடைபெறும். ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !