உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கனவு இல்லம் திட்டத்தில்1,048 வீடுகள் கட்டி முடிப்பு

கனவு இல்லம் திட்டத்தில்1,048 வீடுகள் கட்டி முடிப்பு

'கனவு இல்லம்' திட்டத்தில்1,048 வீடுகள் கட்டி முடிப்புநாமக்கல்:'மாவட்டம் முழுவதும், 'கனவு இல்லம்' திட்டத்தில் இதுவரை, 1,048 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 5,800 பயனாளிகளுக்கு, தலா, 3.53 லட்சம் ரூபாய் வீதம், 204.74 கோடி ரூபாய் மதிப்பில், வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எருமப்பட்டி ஒன்றியத்தில், 385 பயனாளிகள், மோகனுார், 392, நாமக்கல், 411, புதுச்சத்திரம், 466, பரமத்தி, 242, எலச்சிபாளையம், 448, கபிலர்மலை, 300, மல்லசமுத்திரம், 214, பள்ளிப்பாளையம், 420, பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.மேலும், திருச்செங்கோடு, 336, கொல்லிமலை, 472, நாமகிரிப்பேட்டை, 626, ராசிபுரம், 430, சேந்தமங்கலம், 395, வெண்ணந்துார், 263 என, மொத்தம், 5,800 பேருக்கு, வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 1,048 வீடுகள் கட்டுமான பணி முடிந்துள்ளன. மேலும், 3,182 வீடுகள் கட்டுமான பணி, 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி